முதல் பாடலிலேயே சாதனை படைத்த சூர்யா!

முதல் பாடலிலேயே சாதனை படைத்த சூர்யா!

செய்திகள் 27-Aug-2015 11:25 AM IST Chandru கருத்துக்கள்

2014ல் வெளிவந்த சூர்யாவின் ‘அஞ்சான்’ திரைப்படம், 2015ல் சத்தமில்லாமல் ஒரு சாதனை மைல்கல்லை எட்டியிருக்கிறது. ஆம்... யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், சூர்யா பாடிய ‘ஏக் தோ தீன்...’ பாடல் வீடியோ யு டியூப்பில் 1 கோடி முறை பார்க்கப்பட்டு புதிய சாதனை படைத்திருக்கிறது. இத்தனைக்கும் சினிமாவிற்காக சூர்யா பாடிய முதல் பாடலே இதுதான். இதற்கு முன்பு விளம்பரப் படத்திற்காக மட்டுமே சூர்யா பாடியுள்ளார்.

தமிழ் சினிமா வீடியோ பாடல்களைப் பொறுத்தவரை 1 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு முதல் இடத்தில் இருப்பது, ‘3’ படத்தில் இடம்பெற்ற தனுஷ் & அனிருத்தின் ‘ஒய் திஸ் கொலவெறி...’ வீடியோ பாடல்தான். இதற்கு அடுத்து இரண்டாம் இடத்தைப்பிடித்திருக்கிறது ‘அஞ்சானி’ன் ‘ஏக் தோ தீன்...’ பாடல் வீடியோ. தங்கள் நாயகன் குரலில் உருவான முதல் பாடலே சாதனை படைத்துள்ளதால் அதனை ட்விட்டரில் சந்தோஷமாக பகிர்ந்து வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;