‘பாயும் புலி’ ரிலீஸ் சிக்கல் - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

‘பாயும் புலி’ ரிலீஸ் சிக்கல் - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

செய்திகள் 27-Aug-2015 11:02 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தமிழக திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் மீது கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,

‘‘ராக்லைன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘லிங்கா’ திரைப்படம் வடஆற்காடு, தென்ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட்டதில் ஏற்பட்ட நஷ்ட ஈட்டு தொகைக்காக ‘வேந்தர் மூவீஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பான ‘பாயும் புலி’ தமிழ்த் திரைப்படத்தை வடஆற்காடு, தென்ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களில் வெளியிட தடை விதித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும். மேலும் இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. தனி நபர் வியாபார உரிமையை முடக்கும் செயல், ‘லிங்கா’வில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ‘பாயும் புலி’ திரைப்படத்திற்கு தடை விதிப்பது எந்த விதத்திலும் தொழில் தர்மம் அல்ல! எனவே தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் ‘பாயும் புலி’ திரைப்படத்தின் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். அப்படி தடையை நீக்காத பட்சத்தில் ஜனநாயக முறைப்படி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு இப்பிரச்சனை தொடர்பாக தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;