சிவாஜிக்கு மணிமண்டபம்! திரையுலகினர் நன்றி!

சிவாஜிக்கு மணிமண்டபம்! திரையுலகினர் நன்றி!

செய்திகள் 27-Aug-2015 10:37 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று நேற்று சட்டசபையில் தமிழக முதலவர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். நடிகர் சிவாஜியின் கலைச்சேவையை போற்றும் வகையிலும் அவரது நினைவை போற்றும் வகையிலும் நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று நடிகர் சங்கம் சார்பாக நினைவகம் அமைக்கும் வகையில் அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரே உள்ள 65 சென்ட் நிலத்தை தமிழக அரசு 26-9-2002 அன்று நடிகர் சங்கத்திற்கு வழங்கியது. ஆனால் அந்த இடத்தில் சிவாஜிக்காக நடிகர் சங்கத்தினர் இதுவரை நினைவகமோ மணிமண்டபமோ கட்டவில்லை. இந்நிலையில் தமிழக அரசே முன் வந்து அந்த இடத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்துள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் இந்த மணிமண்டபம் அமையவிருக்கிறது.

சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படவிருக்கும் தகவலை நேற்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததும் சிவாஜி குடும்பத்தின் சார்பில் நடிகர் பிரபு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார், நடிகர் விஷால் தலைமையில் அமைந்துள்ள நடிகர் சங்கத்தின் எதிர் அணியினர் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் முதலவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;