செப்டம்பர் 17-ஐ கைபற்றிய கவுண்டமணி!

செப்டம்பர் 17-ஐ கைபற்றிய கவுண்டமணி!

செய்திகள் 26-Aug-2015 12:53 PM IST VRC கருத்துக்கள்

விஜய்யின் ‘புலி’ பட ரிலீசை செப்டம்பர் 17-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் 17-ல் பல படங்கள் ரிலீசாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு காத்திருந்த சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படத்தை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். அத்துடன் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தையும் செப்டம்பர் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்த படங்கள் தவிர கவுண்டமணி கதாநயாகனாக நடித்துள்ள ‘49-ஒ’ படத்தை இதே நாளில் (செப்டம்பர்-17) வெளியிடவிருப்பதாக அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த 3 படங்களின் ரிலீஸ் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் வேறு சில படங்களும் ரிலீஸ் களத்தில் குதிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;