மருத்துவமனையில் அஜித்துடன் மோதிய ‘தல 56’ வில்லன்!

மருத்துவமனையில் அஜித்துடன் மோதிய ‘தல 56’ வில்லன்!

செய்திகள் 26-Aug-2015 12:24 PM IST Chandru கருத்துக்கள்

‘வீரம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித்துக்கு தங்கையாக லக்ஷ்மிமேனனும், அஜித்தின் ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒருசில நாட்களாக சென்னையிலுள்ள ரெமி மாலில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை படத்தின் வில்லன்களில் ஒருவரான பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் ட்வீட் மூலம் தெரிவித்திருக்கிறார். ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா தலைமையில் இந்த சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்தப் படப்பிடிப்பில் அஜித்துடன் ராகுல் தேவ் மோதுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், அனிருத் இசையமைக்கும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;