தஞ்சாவூர் to தஞ்சாவூர் : 'தாரை தப்பட்டை'யின் பயணம்

தஞ்சாவூர் to தஞ்சாவூர் : 'தாரை தப்பட்டை'யின் பயணம்

செய்திகள் 26-Aug-2015 12:00 PM IST Chandru கருத்துக்கள்

‘பரதேசி’ படத்திற்குப் பிறகு பாலா இயக்கி வரும் படம் ‘தாரை தப்பட்டை’. தனது ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மூலம் பாலா தயாரிக்கும் இப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இளையராஜாவின் இன்னிசையில் உருவாகும் 1000வது படம் என்ற சிறப்பைப் பெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தஞ்சாவூரில் தொடங்கியது. படம் ஆரம்பித்தபோதே இப்படத்திற்காக 12 பாடல்களை உருவாக்கியிருந்தார் இளையராஜா.

கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடந்து வந்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் கடைசி ஷெட்யூல் தஞ்சாவூரில் சமீபத்தில் நடைபெற்று வந்தது. தற்போது ஆரம்பித்த இடத்திலேயே படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக ட்வீட் செய்திருக்கிறார் நாயகி வரலட்சுமி சரத்குமார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்ததும் நவம்பர் அல்லது டிசம்பரில் இப்படத்தை வெளியிடத் திட்டமிருட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;