விஜய், விஜய்சேதுபதியுடன் இணையும் ஆர்யா?

விஜய், விஜய்சேதுபதியுடன் இணையும் ஆர்யா?

செய்திகள் 26-Aug-2015 11:45 AM IST Chandru கருத்துக்கள்

செப்டம்பர் 17ல் வெளியாகவிருந்த விஜய்யின் ‘புலி’ ரிலீஸ், தற்போது அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘நானும் ரௌடிதான்’ படம் காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களோடு புதிதாக இன்னொரு படமும் ரிலீஸில் இணைந்திருக்கிறது.

பிவிபி நிறுவனம் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிகளில் தயாரிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படமும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு ஆர்யா, அனுஷ்கா இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்திற்காக 20 கிலோவுக்கு மேல் அனுஷ்கா தன் உடல் எடையைக் கூட்டி, மீண்டும் எடை குறைத்து நடித்திருக்கிறாராம். சமீபத்தில் வெளிவந்த ‘குண்டு’ அனுஷ்கா படங்களுடன் கூடிய ‘இஞ்சி இடுப்பழகி’ போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் இப்படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

விஜய், விஜய்சேதுபதி படங்களைத் தொடர்ந்து ஆர்யாவும் ரிலீஸில் களமிறங்கியிருப்பதால் அக்டோபரின் ஆரம்பமே ரசிகர்களுக்கு அசத்தலாக அமையவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;