‘பாகுபலி’ பாணியில் தனுஷின் ‘வடசென்னை’

‘பாகுபலி’ பாணியில் தனுஷின் ‘வடசென்னை’

செய்திகள் 26-Aug-2015 11:25 AM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி தென்னிந்தியாவின் அதிக வசூல் குவித்த படம் என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி’ 50வது நாளைத் தொடவிருக்கிறது. பிரம்மாண்டமாக உருவான இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டு, அதன் முதல் பாகம் மட்டுமே தற்போது வெளிவந்திருக்கிறது. 2016ல் ‘பாகுபலி’ 2ம் பாகம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற பாணியில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘வடசென்னை’ படத்தையும் இரண்டு பாகங்களாக எடுக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும், பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு ‘காக்கி சட்டை’ புகழ் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். இந்த 3 படங்களையும் இந்த வருடத்திற்குள் முடித்துவிட்டு 2016ல் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பில் முழுமூச்சாக நடிக்கவிருக்கிறாராம் தனுஷ். இப்படத்திற்காக மொத்தமாக 7 மாதங்களுக்கும் மேல் அவர் கால்ஷீட் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. வித்தியாசமான வேடத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் இப்படத்தின் கதை மிகப்பெரியதாக இருப்பதால், அதை இரண்டு பாகங்களாக எடுக்கத்திட்டமிட்டிருக்கிறார்களாம் இயக்குனர் வெற்றிமாறனும், நடிகர் தனுஷும். ‘விஐபி 2’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் சமந்தா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;