நடிகர், நடிகைகள் மீது அருண்பாண்டியன் தாக்கு!

நடிகர், நடிகைகள் மீது அருண்பாண்டியன் தாக்கு!

செய்திகள் 26-Aug-2015 11:06 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் அருண்பாண்டியன் தயாரித்துள்ள படம் ‘சவாலே சமாளி’. அசோக் செல்வன், பிந்து மாதவி ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது தயாரிப்பாளர் அருண்பாண்டியன் பேசும்போது,
‘‘முன்பு எல்லாம் படம் எடுத்து அதை ரிலீஸ் செய்வது ஈசியாக இருந்தது. ஃபைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் நடிகர்கள் அனைவருக்கும் படம் தயாரிப்பில் பங்கு இருக்கும். ஆனால் இப்போது படத்தின் பெரும்பகுதி பணம் நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்குத் தான் போகிறது. ஆனால் படம் ரிலீஸ் செய்யும்போது அந்த தயாரிப்பளாருக்கு யாரும் உதவி செய்வதில்லை. படம் சேட்டிலைட் கூட விற்பதில்லை. அனைத்தும் தயாரிப்பாளர் தலையில்தான் முடிகிறது. .

இந்த படத்தை நானே சொந்தமாக உலக முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறேன் இதை கேள்விபட்ட அசோக்செல்வன், பிந்துமாதவி இருவரும் தங்களது சம்பளத்தில் ஐந்து ஐந்து லட்சம் விட்டு தருவதாக கூறினார்கள். அனால் நான் அவர்களது பெருந்தன்மையை மதித்து அவர்களுக்கு முழு சம்பளத்தையும் செட்டில் செய்து விட்டேன். இன்று பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அந்த படத்தின் வெளியீட்டின்போது அந்த தயாரிப்பாளரின் பிரச்சனைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் கூட உதவ முன் வருவதில்லை’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;