15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்க வரும் ஷாமிலி?

15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்க வரும் ஷாமிலி?

செய்திகள் 26-Aug-2015 10:36 AM IST Chandru கருத்துக்கள்

ஷாமிலி என்று சொன்னால் தெரியாதவர்களுக்குக்கூட ‘அஞ்சலி பாப்பா’ என்று சொன்னால் சட்டென ஞாபகத்திற்கு வந்துவிடுவார். நடிகை ஷாலினியின் தங்கையான ஷாமிலி 90களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் நடித்த படம் 2000ல் வெளிவந்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இப்படத்தில் தபு மற்றும் ஐஸ்வர்யா ராயின் தங்கையாக நடித்திருந்தார் ஷாமிலி. இதுதவிர ‘ஓய்’ என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். 2009ல் வெளிவந்த இப்படத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்திவந்த ஷாமிலி மீண்டும் தமிழில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘தகராறு’ படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் தனது இரண்டாவது படத்தில் விக்ரம் பிரபுவை இயக்கவிருக்கிறார். ‘வீர சிவாஜி’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிப்பதற்குத்தான் ஷாமிலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி குறித்து ஷாமிலியோ, விக்ரம் பிரபுவோ இதுவரை வாய்திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;