தனுஷ் படத்தில் வித்யாபாலன்?

தனுஷ் படத்தில் வித்யாபாலன்?

செய்திகள் 26-Aug-2015 10:10 AM IST Chandru கருத்துக்கள்

தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பிரபுசாலமன் படம், வேல்ராஜ் படம், விரைவில் நடிக்கவிருக்கும் வெற்றிமாறன் படம் ஆகியவற்றை முடித்துவிட்டு ‘காக்கி சட்டை’ ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். பொலிடிக்கல் த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையிலிருக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலனும் முக்கிய வேடமொன்றில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கேரக்டருக்காக பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கடைசியாக வித்யா பாலனை சம்மதிக்க வைத்திருக்கிறார்களாம்.

ஆர்.எஸ்.துரை செந்தில்குமாரின் எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களைத் தயாரித்த தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;