மாயா, ஸ்ட்ராபெர்ரி படங்களைத் தொடர்ந்து ஜாக்சன்துரை!

மாயா, ஸ்ட்ராபெர்ரி படங்களைத் தொடர்ந்து ஜாக்சன்துரை!

செய்திகள் 25-Aug-2015 3:43 PM IST Chandru கருத்துக்கள்

ஒரு காலத்தில் பக்திப் படங்களை தயாரித்து வெளியிட்டு கல்லா கட்டிய ராம நாராயணனின் ‘ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தற்போது பேய்ப் படங்களை வாங்கி வெளியிட்டு மிகப்பெரிய அளவில் லாபம் சம்பாதித்து வருகிறது. கடந்த வருடம் இந்நிறுவனம் வாங்கி வெளியிட்ட அரண்மனை, பிசாசு ஆகிய இரண்டு பேய்ப் படங்களுமே ஹிட். அதோடு இந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றான ‘காஞ்சனா 2’வையும் இந்நிறுவனமே வாங்கி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து வெளியிட்ட ‘டிமான்ட்டி காலனி’யும் லாபம் தந்தது. (இதுதவிர ‘பாகுபலி’ மூலம் பிரம்மாண்ட வசூல் குவித்தது தனிக்கணக்கு).

நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் ‘மாயா’ ஹாரர் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமே கைப்பற்றியிருக்கிறது. இப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. ‘மாயா’வைத் தொடர்ந்து பா.விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தையும் இந்நிறுவனமே வெளியிடவிருக்கிறது. இதுவும் ஒரு பேய்ப்படம்தான். மேற்கண்ட படங்களோடு சிபிராஜ், சத்யராஜ், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘ஜாக்சன்துரை’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் தற்போது கைப்பற்றியிருக்கிறது இந்நிறுவனம்.

(மேற்கண்ட படங்கள் தவிர ருத்ரமாதேவி, உறுமீன் போன்ற படங்களும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது).

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி அனிமல் கேங் -1 டீஸர்


;