‘புலி’ தேதியை கைப்பற்றிய சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ்!

‘புலி’ தேதியை கைப்பற்றிய சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ்!

செய்திகள் 25-Aug-2015 10:56 AM IST Chandru கருத்துக்கள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகவிருந்த ‘புலி’ படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையாததால், அக்டோபர் 1ஆம் தேதிக்கு அப்படத்தின் ரிலீஸ் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விடுமுறை நாளில் களமிறங்க பல படங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, செப்டம்பர் 17ஆம் தேதி இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் கூட்டணியான இயக்குனர் பொன்ராம், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் மீண்டும் இணைந்திருக்கும் ‘ரஜினி முருகன்’ படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருந்தது. செப்டம்பர் 17ஆம் தேதி புலி படம் வெளிவராததைத் தொடர்ந்து அந்த நாளை ‘ரஜினி முருகன்’ படம் கைப்பற்றியிருக்கிறது. இதேநாளில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படமும் வெளிவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு படங்களோடு, இன்னும் ஒன்றிரண்டு சிறிய படங்களும் செப்டம்பர் 17ஆம் தேதி களமிறங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;