வாழ்த்துக்கள் Mr. & Mrs. விஜய்!

வாழ்த்துக்கள் Mr. & Mrs. விஜய்!

செய்திகள் 25-Aug-2015 10:48 AM IST Chandru கருத்துக்கள்

செப்டம்பர் 17ம் தேதியிலிருந்து அக்டோபர் 1ஆம் தேதிக்கு ‘புலி’ ரிலீஸ் மாற்றி வைக்கப்பட்டிருப்பதால் சோகத்திலிருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நாள் இன்று (ஆகஸ்ட் 25). ஆம்... தங்கள் நாயகன் ‘இளையதளபதி’ விஜய்யின் திருமணநாள் இன்று. 1992ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்து நாயகனாக வலம் வந்த விஜய், 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி லண்டன் வாழ் தமிழ்ப் பெண் சங்கீதாவை திருமணம் செய்தார். இவர்களது திருமணம் சென்னையில் திரையுலகத்தினரின் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

விஜய் - சங்கீதா தம்பதிக்கு சஞ்சய் (வயது 15) என்ற மகனும், திவ்யா (10 வயது) என்ற மகளும் இருக்கிறார்கள். பல இளைய தலைமுறை நாயகர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;