‘நாயகி’ த்ரிஷாவுக்கு வயது 20!

‘நாயகி’ த்ரிஷாவுக்கு வயது 20!

செய்திகள் 25-Aug-2015 9:56 AM IST Chandru கருத்துக்கள்

சினிமாவில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 13 வருடங்களைக் கடந்துவிட்டார் த்ரிஷா. ஆனால், இன்னும்கூட ‘மௌனம் பேசியதே’ படத்தில் பார்த்த அதே ஸ்லிம் அன்ட் ப்யூட்டி த்ரிஷா அப்படியே நம் கண்முன்னே வலம் வருகிறார். அதுதான் த்ரிஷாவின் வெற்றி ரகசியம்! இதுவரை 50 படங்களில் த்ரிஷா நடித்திருந்தாலும்கூட, தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘நாயகி’ படம் த்ரிஷாவிற்கு ரொம்பவே ஸ்பெஷல். காரணம் இப்படத்தில் அவர்தான் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே.

80களில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகிவரும் இந்த ஹாரர் படத்தில் நடிகை த்ரிஷா 20 வயது பெண் கேரக்டரில் நடிக்கிறாராம். அதற்காக தன் உடல் எடையிலும் சில கிலோக்களை குறைத்திருக்கிறாராம். தவிர, பார்ப்பதற்கு 20 வயது பெண்போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக மும்பையிலிருந்து ஸ்பெஷலாக மேக்அப் ஆர்டிஸ்ட்டையும் வரவழைத்திருக்கிறார்களாம்.

‘நாயகி’ பட த்ரிஷாவை திரையில் பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு வயது 32 ஆகிவிட்டது என சூடம் ஏற்றி சத்தியம் செய்தால்கூட நம்பமாட்டார்கள் என்கிறது படக்குழு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இணையதளம் - டிரைலர்


;