புலி ரிலீஸில் அதிரடி மாற்றம்!

புலி ரிலீஸில் அதிரடி மாற்றம்!

செய்திகள் 24-Aug-2015 6:42 PM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் உள்ளிட்ட படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் புலி படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டுள்ளன. அதோடு புலி படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி அறிவித்துள்ளது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ்.

செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தற்போது அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதேநாளில் விஜய்சேதுபதி நடிப்பில் வி’க்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘நானும் ரௌடிதான்’ படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 2012ல் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படமும், விக்னேஷ் சிவன் இய’கிய ‘போடா போடி’ படமும் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;