சிம்பு, தமன்னாவை ‘மெர்சல்’ ஆக்கும் அமீர்?

சிம்பு, தமன்னாவை ‘மெர்சல்’ ஆக்கும் அமீர்?

செய்திகள் 24-Aug-2015 3:18 PM IST Chandru கருத்துக்கள்

‘வாலு’ ரிலீஸாகிவிட்ட சந்தோஷத்திலிருக்கும் சிம்பு தற்போது கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடைமையடா’ படத்திலும், செல்வராகவனின் ‘கான்’ படத்திலும் பிஸியாக இருக்கிறார். அதோடு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கும் இன்னும் ஒரு சில படப்பிடிப்பு வேலைகள் மீதமிருக்கின்றன. தவிர, ‘வேட்டைமன்னன்’ வேலைகளையும் மீண்டும் கையிலெடுக்கவிருக்கிறார்.

இந்த 4 படங்கள் தவிர, அமீர் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. வித்தியாசமான காதல் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக தமன்னா முதன்முறையாக நடிக்கிறார். அதோடு இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத்தும் முதல்முறையாக சிம்புவுடன் கூட்டணி அமைக்கிறார். தற்போதைக்கு இப்படத்திற்கு ‘மெர்சல்’ என்று பெயர் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - தாடிக்காரா ஆடியோ பாடல்


;