‘ஹைக்கூ’விற்கு தமிழ் தலைப்பு கேட்கிறார் பாண்டிராஜ்!

‘ஹைக்கூ’விற்கு தமிழ் தலைப்பு கேட்கிறார் பாண்டிராஜ்!

செய்திகள் 24-Aug-2015 1:39 PM IST Chandru கருத்துக்கள்

குழந்தைகளை மையமாக வைத்து பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம் ‘ஹைக்கூ’. கவின், நாயனா, அபிமான் உள்ளிட்ட குழந்தை நட்சத்திரங்கள் இப்படத்தில் ஹீரோக்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிறப்புத் தோற்றமொன்றில் நடித்திருக்கும் சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் ‘ஹைக்கூ’வை தயாரித்துள்ளது. கார்த்திக் குமார், பிந்துமாதவி, அமலாபால் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் இறுதிக்கட்டத்திலிருக்கின்றன. அரோல் கொரேலி இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘ஹைக்கூ’ பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

இந்நிலையில் வரிச்சலுகை பெறுவதற்காக இப்படத்தின் டைட்டிலை மாற்றும் முடிவில் இருக்கிறது ‘ஹைக்கூ’ டீம். இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இயக்குனர் பாண்டிராஜ், ‘‘ஹைக்கூ தலைப்பிற்கேற்ற நல்ல தமிழ் தலைப்பைக் கூறுங்கள். சரியாக அமையும் பட்சத்தில் அதனைத் தலைப்பாகப் பயன்படுத்துகிறோம்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். புதிய தலைப்புடன் ஆடியோ வெளியீட்டுத் தேதியும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;