உதயநிதியுடன் முதல்முறையாக இணையும் விவேக்!

உதயநிதியுடன் முதல்முறையாக இணையும் விவேக்!

செய்திகள் 24-Aug-2015 1:25 PM IST Chandru கருத்துக்கள்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் பெரும்பாலான நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துவிட்டார். ரஜினி, விஜயகாந்தை தொடர்ந்து அஜித், விஜய் படங்களிலும், அதனையடுத்து தற்போதைய தலைமுறை நடிகர்களான சிம்பு, தனுஷ் வரை அனைத்துத்தரப்பு நடிகர்களின் படத்திலும் காமெடியனாக வலம் வந்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார் (கமலுடன் இணைந்து விவேக் இன்னும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). தயாரிப்பாளராக இருந்து நடிகராக புரமோஷன் ஆகியிருக்கும் உதயநிதியுடன் ஒரு படத்திலும் விரைவில் நடிக்கவிருக்கிறார் விவேக்.

‘நண்பேன்டா’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘மான்கராத்தே’ திருக்குமரன் இயக்கும் ‘கெத்து’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி. இப்படத்திற்குப் பிறகு ‘என்றென்றும் புன்னகை’ அஹமது இயக்கும் ‘ஜாலி எல்.எல்.பி.’ ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராதா ரவி ஆகியோரும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் காமெடியனாக நடிக்க நடிகர் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தனது முதல் 3 படங்களில் சந்தானத்துடன் கூட்டணி அமைத்த உதயநிதி முதல்முறையாக விவேக்குடன் இணைந்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;