தீபாவளி ரேஸில் அஜித்துடன் விஜய் ஆண்டனி!

தீபாவளி ரேஸில் அஜித்துடன் விஜய் ஆண்டனி!

செய்திகள் 24-Aug-2015 11:54 AM IST Chandru கருத்துக்கள்

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களைத் தொடர்ந்து தற்போது ‘பிச்சைக்காரன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. ‘555’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கி வருகிறார் ‘பூ’ புகழ் சசி. எந்த ஹீரோவும் ஏற்கத் தயங்கும் ‘பிச்சைக்காரன்’ வேடத்தில் இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனியே படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத்திட்டமிட்டிருக்கிறார்களாம். சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படமும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதியே வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் தீபாவளி ரேஸில் அஜித்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியும் இடம்பிடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தெறி VFX BREAKDOWN - வீடியோ


;