விநாயகர் சதுர்த்தியைக் குறிவைக்கும் ரஜினி, அஜித், விஜய்!

விநாயகர் சதுர்த்தியைக் குறிவைக்கும் ரஜினி, அஜித், விஜய்!

செய்திகள் 24-Aug-2015 10:38 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் கொண்டாட்டமான காலம் என்றுதான் தற்போதைய நிலவரத்தைச் சொல்ல வேண்டும். ஆம்... ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் தற்போது விறுவிறுப்பாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலை எப்போதாவதுதான் வரும். ரஜினிக்கு ‘கபாலி’, கமலுக்கு ‘தூங்காவனம்’, விஜய்க்கு ‘புலி’, அட்லி படம், அஜித்திற்கு ‘தல 56’, சூர்யாவுக்கு ‘24’, விக்ரமுக்கு ‘10 எண்றதுக்குள்ள’ என எல்லா நடிகர்களின் ரசிகர்களும் உற்சாகமாக சினிமா அப்டேட்களை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘புலி’ படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் ஆகியவை வெளியாகிவிட்டன. படமும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் இதேநாளில் ரசிகர்களுக்கு மேலும் இரண்டு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஆம்... ரஜினியின் ‘கபாலி’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், அஜித்தின் ‘தல 56’ டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடும் செப்டம்பர் 17ஆம் தேதியே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செப்டம்பர் 17ஆம் தேதியை தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;