முதல்முறையாக இரட்டை வேடத்தில் தனுஷ்!

முதல்முறையாக இரட்டை வேடத்தில் தனுஷ்!

செய்திகள் 24-Aug-2015 9:49 AM IST Chandru கருத்துக்கள்

‘மாரி’ படத்தைத் தொடர்ந்து தற்போது 3 படங்களில் பிஸியாக இருக்கிறார் நடிகர் தனுஷ். அதில் ஒன்று... வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயர் வைக்கப்படாத படம். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்ஸனும், சமந்தாவும் நடிக்கிறார்கள். கிட்டத்தட்ட பாதிக்கும்மேல் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டன. இரண்டாவது... பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்றாவது படம்... வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘வடசென்னை’. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது.

இந்த 3 படங்கள் தவிர எதிர்நீச்சல், காக்கிசட்டை படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். ஆக்ஷன், த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம் தனுஷ். அண்ணன், தம்பியாக இரண்டு கேரக்டர்களில் தனுஷ் நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்டிப்பு அக்டோபரில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோயின், டெக்னீஷியன் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;