ஹேப்பி பர்த்டே மெகா ஸ்டார்!

ஹேப்பி பர்த்டே மெகா ஸ்டார்!

செய்திகள் 22-Aug-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

தெலுங்கு சினிமாவின் ‘மெகா ஸ்டார்’ என்று அழைக்கப்படும் சிரஞ்சீவி இன்று 60- ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். 1978-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான சிரஞ்சீவி ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்ததோடு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அவரை முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிக்க வைத்தவர் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் தான்! ரஜினியுடன் ‘இராணுவ வீரன்’, ‘மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்த சிரஞ்சீவி அரசியலிலும் நுழைந்து மக்கள் பணி ஆற்றி வந்தார். அரசியலில் நுழைந்ததை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த சிரஞ்சீவி இதுவரை 149 படங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது அரசியலில் அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கும் சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்றும், அவர் நடிக்கும் 150-ஆவது படத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து, நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது இன்று பிறந்த நாள் காணும் சிரஞ்சீவி மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும், அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்! இந்த இனிய நாளில் அவருக்கு வாழ்த்துச் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;