‘புலி’ டிரைலர் சாதனை : 3 நாட்களில் முதலிடம்!

‘புலி’ டிரைலர் சாதனை : 3 நாட்களில் முதலிடம்!

செய்திகள் 22-Aug-2015 10:31 AM IST Chandru கருத்துக்கள்

‘சபாஷ் சரியான போட்டி’ என பாராட்டும் அளவுக்கு விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது ஹீரோக்களின் டீஸரையும், டிரைலரையும் யு டியூப்பில் பார்த்து சாதனை படைத்து வருகிறார்கள். அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பட டீஸரும், டிரைலரும் பல புதிய சாதனைகளைப் படைத்தது. அதில் முக்கியமானது ‘லைக்ஸ்’ சாதனை. முதன்முறையாக 50 ஆயிரம் லைக்ஸ்களைக் கடந்த தென்னிந்திய சினிமா டீஸர்/டிரைலர் என்ற சாதனையை ‘என்னை அறிந்தால்’ படைத்தது. அதேபோல் இந்திய அளவில் லைக்ஸில் 2ஆம் இடத்தைப் பிடித்தது ‘என்னை அறிந்தால்’ டீஸர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘புலி’ டீஸர் இதில் சில சாதனைகளை தகர்த்தது. அதாவது ‘என்னை அறிந்தால்’ பட டீஸர்/டிரைலர் பார்வையாளர் எண்ணிக்கையை இந்த டீஸர் கடந் து சாதித்தது. தற்போது வரை ‘புலி’ டீஸரை 71 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை ஐ டீஸர் (1 கோடியே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்), ஐ டிரைலர் (85 லட்சம் பார்வையாளர்கள்) ஆகியவற்றைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் இருப்பது ‘புலி’ டீஸர்தான்.

தற்போது வெளிவந்திருக்கும் ‘புலி’ டிரைலர் 3 நாட்களில் லைக்ஸில் முதலிடத்தைப் பிடித்து சாதித்திருக்கிறது. தென்னிந்திய சினிமா டிரைலர்களின் லைக்ஸைப் பொறுத்தவரை ‘புலி’ டிரைலர் பெற்றிருக்கும் 68,600 லைக்குகளே அதிகபட்சம். இதுவரை ‘என்னை அறிந்தால்’ டிரைலர் 67 ஆயிரம் லைக்குகள் பெற்றிருந்ததே அதிகபட்ச சாதனை. ‘புலி’ டிரைலர் அதனை முறியடித்திருக்கிறது.

(டீஸர் லைக்ஸைப் பொறுத்தவரை ‘என்னை அறிந்தால்’ டீஸரே (95 ஆயிரம் லைக்ஸ்) முதலிடத்தில் இருக்கிறது).

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;