‘பாயும் புலி’ சென்சார் க்ளியர்!

‘பாயும் புலி’ சென்சார் க்ளியர்!

செய்திகள் 22-Aug-2015 10:21 AM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘பாயும் புலி’ படம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி ரிலீசாகிறது. நேற்று சென்சார் குழுவினர் பார்வைக்கு சென்ற ‘பாயும் புலி’க்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்! விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இப்படம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன், ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாகவும் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்க முக்கிய கேரக்டரில் சூரியும் நடித்துள்ளார். டி.இமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;