சால்ட் அன்ட் பெப்பர் லுக் ரஜினி! - ‘கபாலி’ போட்டோஷூட் அப்டேட்

சால்ட் அன்ட் பெப்பர் லுக் ரஜினி! - ‘கபாலி’ போட்டோஷூட் அப்டேட்

செய்திகள் 22-Aug-2015 9:18 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு முறை ரஜினி பட அறிவிப்பு வெளிவந்ததுமே தமிழ் சினிமா ஒரு கொண்ட்டாட்ட மூடிற்கு தயாராகிவிடும். இந்த முறை ‘கபாலி’ அறிவிப்பு வெளிவந்த போதும் அப்படியேதான். டைட்டில் அறிவிக்கப்பட்ட அன்று உலகளவில் ‘கபாலி’யை டிரென்ட் செய்தார்கள் ரஜினி ரசிகர்கள். இயக்கம் ரஞ்சித், இசை சந்தோஷ் நாராயணன், ரஜினிக்கு ஜோடி ராதிகா ஆப்தே, ரஜினியின் மகளாக நடிகை தன்ஷிகா என புத்தம் புது கூட்டணியோடு ‘கபாலி’ உருவாகவிருப்பதால் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு.

நேற்று இப்படத்திற்கான போட்டோஷூட் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்றது. அதுகுறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த போட்டோஷூட்டில் ரஜினியுடன் ராதிகா ஆப்தேவும் கலந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சால்ட் அன்ட் பெப்பர் லுக் விக், வெள்ளை தாடியுடன் ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் கலந்து கொண்டிருக்கிறார். கூடவே வெள்ளை டிசர்ட் அணிந்த சிறுமி ஒருத்தியை ரஜினி கையில் பிடித்துக் கொண்டிருப்பதுபோலவும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாம். அதேபோல் ராதிகா ஆப்தே, சேலையில் மூக்கின் இரண்டு பக்கத்திலும் வளைய மூக்குத்தி அணிந்து பாராம்பரிய உடையில் போட்டோஷூட்டில் கலந்து கொண்டாராம். இந்த போட்டோஷூட்டின்போது ரஜினியை நேரில் சந்தித்ததாக நடிகர் கலையரசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட போட்டோஷூட்டும் நடைபெற்றதா என்பது குறித்து தெரியவில்லை.

‘கபாலி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 17ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் மலேசியாவில் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தமிழ் நடிகைகள் மீதான பார்வையை இயக்குனர்கள் மாற்றவேண்டும் - ரித்விகா


;