கிராமத்தை தத்தெடுத்து நிஜ ஹீரோவான மகேஷ் பாபு!

கிராமத்தை தத்தெடுத்து நிஜ ஹீரோவான மகேஷ் பாபு!

செய்திகள் 21-Aug-2015 3:30 PM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஒரு ஹீரோ ஆகியிருக்கிறார் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு! சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் படம் ‘ஸ்ரீமந்த்துடு’ (தமிழில் – செல்வந்தன்). இந்த படத்தில் மகேஷ்பாபு பெரிய ஒரு தொழிலதிபரின் மகனாக நடித்துள்ளார். பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் ஏழை, எளிய மக்களிடத்தில் அதிக பாசமும், நேசமும் கொண்டவர்! இப்படத்தில் ஒரு கிராமத்தை தத்து எடுப்பது மாதிரி நடித்திருப்பார் மகேஷ் பாபு! இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, வசூலிலும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் மூலம் தனக்கு கிடைத்த வருமானத்தை வைத்து ஆந்திர மாநிலம் மெஹபூப் நகர் மாவட்டத்திலுள்ள புரிபாலேம் என்ற கிராமத்தை தத்து எடுத்திருக்கிறார் மகேஷ் பாபு! இது ரொம்பவும் பின் தங்கிய கிராமம் என்பதோடு மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா பிறந்த ஊராம்! ‘ஸ்ரீமந்த்துடு’ படத்திலும் தன் தந்தை பிறந்த ஊரை தத்து எடுப்பது மாதிரி தான் மகேஷ் பாபு நடித்திருப்பார். இப்போது அதை நிஜத்திலும் செய்து காட்டி நிஜ ஹீரோவாகியிருக்கிறார் மகேஷ் பாபு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;