27 அறிமுகங்கள் இணையும் ‘மய்யம்’ - கமல் பாராட்டு!

27 அறிமுகங்கள் இணையும் ‘மய்யம்’ - கமல் பாராட்டு!

செய்திகள் 21-Aug-2015 12:03 PM IST VRC கருத்துக்கள்

பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கதை, திரைக்கதை அமைத்து தயாரித்திருக்கும் படம் ‘மய்யம்’. இயக்குனர் கே.பாலச்சந்தர், கமல்ஹாசன் உட்பட பல திரையுலக பிரமுகர்களின் பாசத்திற்குரியவர் ஏ.பி.ஸ்ரீதர். ‘ஸ்கெட்ச் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.பி.ஸ்ரீதர் தயாரித்துள்ள ‘மய்யம்’ திரைப்படம் சென்னையில் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாம். ஒரு கடப்பாறை, 3 ஏ.டி.எம்.கார்ட், ஒரு ஃபுல் பாட்டில், 1 லெக் பீஸ், 3 வாட்டர் பாக்கெட், 4 ஆண்கள், 3 பெண்கள் இவர்கள் சுற்றி பின்னப்பட்ட காதல், நகைச்சுவை, திகில் படமாம் ‘மய்யம்’.

இந்த படத்தின் இயக்குனர், பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குனர், ஸ்டன்ட் இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர், விளம்பர வடிவமைப்பாளர் போன்ற முக்கிய பணிகளை செய்திருப்பவர்கள் புதுமுகங்களே! இப்படத்தில் 27 புதுமுகங்களை அறிமுகம் செய்கிறார் ஸ்ரீதர்! அவர்களில் 12 பேர் இன்னமும் பல்வேறு கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிட்த்தக்கது.

படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் ‘மய்யம்’ படத்தின் குழுவினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டியுள்ளதோடு, படத்தின் ஆடியோவையும் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்! தனது அலுவலகத்தில் ‘மய்யம்’ ஆடியோவை வெளியிட்டு கமல்ஹாசன் பேசும்போது, “ஆர்.சி.சக்தி என்ற இளைஞனும், கமல்ஹாசன் என்ற இளைஞனும் வசதியில்லாத காலத்தில் எடுத்த ‘உணர்ச்சிகள்’ திரைப்படம் இங்குதான் உருவானது! பெரிய அளவில் செலவு செய்து படம் எடுக்க முடியாததால் இந்த ஆஃபீஸ் மாடியில்தான் எடுத்தோம். அந்த புகைப் படங்களை பார்த்துதான் ஐயா பாலசந்தர் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இந்த அலுவலகத்திற்கு நல்லதும் மனதுக்குள் நிறைந்திருப்பதுமான பல பெருமைகள் உண்டு.

இங்கு பாரதிராஜா, மணிரத்னம் எல்லாம் பேசி மகிழ்ந்திருக்கிறார்கள். பாலசந்தர் பலமுறை வந்து போயிருக்கிறார். இந்த கட்டிடத்தின் மாடியில் நின்று ஓயாமல் சிகரெட் குடித்த இளைஞன் தான் ரஜினிகாந்த். அப்படியெல்லாம் பெருமைபெற்ற இந்த இடத்தில் ஏ.பி.ஸ்ரீதர் மய்யமாக இருந்து தயாரித்துள்ள ‘மய்யம்’ படத்தின் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி” என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நமது - டிரைலர்


;