காக்கிச் சட்டை அணியும் விஜய்சேதுபதி!

காக்கிச் சட்டை அணியும் விஜய்சேதுபதி!

செய்திகள் 21-Aug-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் அடுத்து இயக்கும் படம் ‘சேதுபதி’. இந்த படத்தில் கதையின் நாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். கதாநாயகியக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல்துறை ஆய்வாளராக நடிக்கிறார். இப்படம் காக்கி சட்டைக்கு உரிய கௌரவத்தை தரும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் அருண்குமார். இந்த படத்தை ‘வன்சன் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் சுதர்சன் தயாரிக்கிறார். நிவாஸ் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. ஏற்கெனவே விஜயகாந்த் நடிப்பில் ‘சேதுபதி ஐ.பி.எஸ்.’ என்ற படம் வெளியாகியுள்ள நிலையில் இப்போது இந்த ‘சேதுபதி’ மூலம் விஜய்சேதுபதியும் காக்கிச் சட்டை அணிகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சமில்லை அச்சமில்லை - டீசர்


;