‘50’ஐ தொட்ட பாபநாசம்!

‘50’ஐ தொட்ட பாபநாசம்!

செய்திகள் 21-Aug-2015 10:48 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன், கௌதமி, ஆஷாசரத், முதலானோர் நடிப்பில் ஜீத்து ஜோசஃப் இயக்கி கடந்த மாதம் (ஜூலை) 3-ஆம் தேதி ரிலீசான படம் ‘பாபநாசம்’. மலையாள ‘திருசியம்’ படத்தின் ரீ-மேக் ஆக உருவாகிய இப்படம் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் இப்படம் ரீ-மேக் ஆகி வெற்றி பெற்றதோடு, இப்போது தமிழிலும் வெற்றி கண்டுள்ளது! கடந்த மாதம் 3-ஆம் தேதி ரிலீசான ‘பாபநாசம்’ 50 ஆவது நாளை தொட்டு இன்னமும் ஓடிக்கொண்டிருக்க, பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ‘பாபநாசம்’ படக்குழுவினர்! மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடத்தை தொடர்ந்து இப்படம் ஹிந்தியிலும் ‘திருஷியம்’ என்ற பெயரிலேயே ரீ-மேக் ஆனது. ஆனால் கடந்த மாதம் 31-ஆம் தேதி ரிலீசான இப்படம் நஷ்டம் ஏற்படுத்தாத வகையில் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு மொழியில் வெற்றிபெற்ற ஒரு கதையை வேறு மொழிகளில் ரீ-மேக் செய்து எடுக்கும்போது அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறுவதில்லை! ஆனால் அதிலிருந்து விதிவிலக்காக மலையாள ‘திருசியம்’ அமைந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;