பிரகாஷ்ராஜின் ‘சில நேரங்களில்’

பிரகாஷ்ராஜின் ‘சில நேரங்களில்’

செய்திகள் 20-Aug-2015 2:37 PM IST VRC கருத்துக்கள்

‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எல்.விஜய், அமலா பால் தம்பதியர் தயாரிக்கும் படத்தை ஏ.எல்.விஜய்யின் குருநாதர் ப்ரியதர்ஷன் இயக்குகிறார். இப்படத்தின் தயாரிப்பில் சமீபத்தில் பிரபுதேவாவும் இணைந்துள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் முதலானோர் நடிக்கின்றனர். ‘காஞ்சிவரம்’ படத்திற்கு பிறகு ப்ரியதர்ஷனும், பிராகாஷ் ராஜும், ஸ்ரேயா ரெட்டியும் இணைந்துள்ள இப்படம் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை என்று சொல்லப்படுகிறது. பெயர் வைக்காமல் படப்பிடிப்பு நடந்து வந்த இப்படத்திற்கு இப்போது ‘சில நேரங்களில்’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள். குறுகிய கால தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஓளிப்பதிவு செய்ய, சாபு சிரில் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;