‘நாயகி’ குறித்து த்ரிஷா!

‘நாயகி’ குறித்து த்ரிஷா!

செய்திகள் 20-Aug-2015 2:33 PM IST VRC கருத்துக்கள்

த்ரிஷா நடிக்கும் ‘நாயகி’ படத்தின் பூஜை இன்று காலை ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடைபெற்றது. அப்போது த்ரிஷா பேசும்போது, ‘‘நான் இதுவரை பெரும்பாலும் ‘ஸ்வீட்’டான கேரக்டர்களில் தான் நடித்திருக்கிறேன். ஆனால் ‘நாயகி’ படத்தில் எனக்கு முற்றிலும் மாறுபட்ட கேரக்டர் கிடைத்துள்ளது. ஹாரர், காமெடி கலந்த கதை இது. 1980 காலகட்டத்தில் வருவது மாதிரியான கேரக்டரில் நடிக்கிறேன். இது எனக்கு மாறுபட்ட அனுபவமாக இருக்கும். எல்லோரும் இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்று எழுதுறாங்க. ஹீரோயினுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் முக்கியத்துவம் உள்ள படம் இது. நயன்தாரா ஹாரர் படமான ’மாயா’வில் நடித்துள்ளதால் அதற்கு போட்டியாக நீங்கள் இப்படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார்கள். நான் யாருக்கும் போட்டி கிடையாது. இப்போது நிறைய ஹாரர் படங்கள் வருகிறது. அதில் பெரும்பாலான படங்கள் வெற்றியும் பெறுகிறது. ‘மாயா’ வேறு ஜானர் படம் ‘நாயகி’ வேறு ஜானர் படம்’’ என்றார்.

‘அபியும் நானும்’ படத்தை தொடர்ந்து த்ரிஷாவும், கணேஷ் வெங்கட் ராமனும் இணைந்து நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கோவி இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மோகினி - டிரைலர்


;