அம்மா பெயரில் விஷால் அறக்கட்டளை!

அம்மா பெயரில் விஷால் அறக்கட்டளை!

செய்திகள் 20-Aug-2015 11:10 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் விஷால் தனது தாயார் பெயரில் ‘தேவி சோஷியல் அன்ட் எஜுகேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை துவங்கியுள்ளார். இந்த அறக்கட்டளையை துவங்கியதும் உடனடியாக கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி மாணவிகள் 16 பேருக்கு கல்வி உதவியும் செய்துள்ளார். இது சம்பந்தமாக விஷால் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
‘‘என்னை கண்டிப்புடன் வளர்த்தவர் என் அம்மா. ‘எந்த வேலையாவது நீ பார், ஆனால் நாலு பேருக்கு நல்லது செய்’ என்பது என் அம்மா எனக்கு சொன்ன அறிவுரை! மேலும் மறைந்த மாமேதை அப்துல்கலாம் அவர்கள் கண்ட கனவு அனைவரும் கல்வியில் உயரவேண்டும் என்பது தான். அவரது தூண்டல் எனக்குள்ளும் உண்டு. குறிப்பாக பெண்கள் கல்விக்கு உதவுவதே இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம்! இந்த அறக்கட்டளை சார்பில் முதல் கட்டமாக 16 மாணவிகளுக்கு உதவிகளை செய்துள்ளேன். இந்த உதவிகளை தொடர்ந்து என் வாழ்நாள் முழுவதும் செய்ய திட்டமிட்டுள்ளேன். தகுதியான, உதவி தேவையான மாணவிகளை தேர்வு செய்ய என் ரசிகர் மன்றத்தினரின் உதவியை நாடவும் முடிவு செய்துள்ளேன்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தூங்காவனம் படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாசன் - வீடியோ


;