உதயநிதி படத்தில் ‘ஆரம்பம்’ அக்‌ஷரா!

உதயநிதி படத்தில் ‘ஆரம்பம்’ அக்‌ஷரா!

செய்திகள் 20-Aug-2015 10:32 AM IST VRC கருத்துக்கள்

உதயநிதி ஸ்டாலின் தற்போது நடிக்கும் ‘கெத்து’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்ததாக அஹமத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜாலி எல்.எல்.பி.’ படத்தின் ரீமேக் ஆக உருவாக இருக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இப்படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லப்படுகிற அளவுக்கு ஒரு வழக்கறிஞர் கேரக்டரும் உண்டாம்! இந்த கேரக்டரில் நடிக்க ‘ஆரம்பம்’ படத்தில் நடித்த அக்‌ஷரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழுக்கு ஏற்ற மாதிரி கதையில் சில மாற்றங்களை செய்திருக்கிறாராம் இயக்குனர் அஹமத்! இந்த படத்தில் பிரகாஷ் ராஜும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;