தரணி உதவியாளர் இயக்கும் படம்!

தரணி உதவியாளர் இயக்கும் படம்!

செய்திகள் 19-Aug-2015 12:32 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் தரணியின் உதவியாளர் நந்தன் எழுதி, இயக்கும் படம் ‘பிரபா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் கதையின் நாயகியாக சுவாசிகா நடிக்கிறார். கதாநாயகனாக விஜய்ராம் நடிக்க, இவர்களுடன் வில்லனாக ரஜினிபாணி, குழந்தை நட்சத்திரமாக பேபி தமிழிசை முதலானோர் நடிக்கின்றனர். ‘தமிழ்த்திரை’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்து இயக்குனர் நந்தன் கூறும்போது,

‘‘இது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படம். பொதுவாக பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து வெளியே வர மற்றவர்களின் உதவியை எதிரபார்ப்பார்கள். அப்படி இல்லாமல் பெண்களே தங்களது பிரச்சனைக்கு எதிராக போராடி வெற்றிபெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த சுவாசிகா இப்படத்தில் நவநாகரீக பெண்ணாகவும், முற்போக்கு சிந்தனையுள்ள பெண்ணாகவும் நடிக்கிறார். இப்படத்திற்கு எஸ்.ஜே.ஜனனி இசை அமைக்கிறார். முத்துராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் அதிவிரைவில் ரிலீசாகவிருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;