‘ஹைக்கூ’ குறித்து பாண்டிராஜ் புதிய தகவல்!

‘ஹைக்கூ’ குறித்து பாண்டிராஜ் புதிய தகவல்!

செய்திகள் 19-Aug-2015 11:21 AM IST VRC கருத்துக்கள்

‘36 வயதினிலே’ படத்தை தொடர்ந்து சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவன தயாரிப்பில் ரிலீசாகவிருக்கிற படம் ‘ஹைக்கூ’. குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் குழந்தைகள் கவின், நயனா, அபிமான் ஆகியோருடன் பிந்து மாதவி முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க, இவர்களுடன் சூர்யா, அமலா பால் ஆகியோர் கெஸ்ட் ரோல்களில் நடித்துள்ளார்கள். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இம்மாதம் இறுதியில் நடைபெறவிருக்கிறது. டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டின்போது ‘ஹைக்கூ’ பட ரிலீஸ் தேதியையும் அறிவிக்க உள்ளதாக படத்தின் இயக்குன்ர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;