‘காவியத்தலைவன்’ ஜோடி மீண்டும் இணையும் படம்!

‘காவியத்தலைவன்’ ஜோடி மீண்டும் இணையும் படம்!

செய்திகள் 19-Aug-2015 10:22 AM IST VRC கருத்துக்கள்

‘காவியத்தலைவன்’ படத்தில் இணைந்த பிருத்திவிராஜ், வேதிகா மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் படத்தில் இல்லை, ‘ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ்’ என்ற மலையாள படத்தில்! பிரபல ஒளிப்பதிவாளரான சுஜித் வாசுதேவ் இயக்குனராக அறிமுகமாகி இயக்கும் படம் இது. பிருத்திவிராஜ் கதாநாயகனாக நடித்த ‘சிட்டி ஆஃப் காட்’, ‘மெம்மரீஸ்’ ‘செவந்த் டே’ ஆகிய மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சுஜித் வாசுதேவ் என்பது குறிப்பிடத்தக்கது. ரொமான்டிக் காதல், காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு வாய்த்த அடிமைகள் - டீசர்


;