தெலுங்கில் 1200 திரையரங்குகளில் ‘புலி’

தெலுங்கில் 1200 திரையரங்குகளில் ‘புலி’

செய்திகள் 18-Aug-2015 1:38 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படத்தின் டிரைலர் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது. ஏற்கெனவே இப்படத்தின் டீஸ்ரும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் வருகிற 20-ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘புலி’ டிரைலருக்கும் ரசிகர்களின் பலத்த வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ‘புலி’ படக் குழுவினர்! ‘புலி’ படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எஸ்.வி.ஆர்.மீடியா என்ற நிறுவனம் வெளியிடுகிறது. ஏற்கெனவே விஜய் நடித்த பல படங்களை ஆந்திராவில் வெளியிட்டுள்ள இந்நிறுவனத்தார் ‘புலி’ படத்தின் டிரைலரை 1200 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்று ‘புலி’ படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அதைப் போலவே அடுத்த மாதம் 17-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற ‘புலி’ படத்தை உலகம் முழுக்க விஜய் இதுவரை நடித்து வெளிவந்த படங்கள் ரிலீஸ் செய்ததை விட அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;