ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய விஷால்!

ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய விஷால்!

செய்திகள் 17-Aug-2015 1:08 PM IST VRC கருத்துக்கள்

அடுத்த மாதம் 11-ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. வழக்கமாக நடக்கும் தேர்தல் மாதிரி இல்லாமல் இந்த வருட தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் சரத்குமார் அணி, மற்றும் நடிகர் விஷால் அணி என இரு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிட இருக்கிறாது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் நடிகர் விஷால் அணியினர் வாக்குகள் சேகரிக்கும் நோக்கத்தில் சங்கத்தில் வாக்கு உரிமையுள்ளவர்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தரும்படி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை விஷால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து தங்களது குழுவுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து விஷால் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், அஜித் உட்பட எல்லா நடிகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;