மம்முட்டிக்கு ஜோடியாகிறார் த்ரிஷா!

மம்முட்டிக்கு ஜோடியாகிறார் த்ரிஷா!

செய்திகள் 17-Aug-2015 12:41 PM IST VRC கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிப் படங்களில் நடித்துள்ள த்ரிஷா இதுவரை எந்த மலையாள படத்திலும் நடித்ததில்லை. ஏற்கெனவே மலையாளத்தின் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பும் வந்தும் அப்படங்களை தவிர்த்து வந்தார் த்ரிஷா! இந்நிலையில் விரைவில் ஒரு மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார் த்ரிஷா! உதய் ஆனந்த் என்பவர் இயக்கவிருக்கும் படம் ‘ஒயிட்’. இப்படத்தில் ஹீரோவாக மம்முட்டி நடிக்கிறார். இப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க முதலில் ஹிந்தி நடிகையான ஹூமா குரேஸியிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை! அதன் பிறகு த்ரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்து அவர்கள் த்ரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

படத்தின் கதையும், அதில் த்ரிஷாவின் கேரக்டரும் த்ரிஷாவுக்கு மிகவும் பிடித்துள்ளதாம். அதனால் முதன் முதலாக இந்த மலையாள படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் த்ரிஷா. ஆனால இப்படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கும் சில கால்ஷீட் பிரச்சனை இருப்பதால் இப்போது அது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்! அந்த பிரச்சனைகள் முடிந்ததும் இப்படத்தில் நடிப்பது குறித்த அதிகாரபூர்வமான தகவலை வெளியிட இருக்கிறாராம் த்ரிஷா! இந்த தகவலை நம்மிடம் த்ரிஷாவின் தாயார் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;