‘புலி’யுடன் மோதும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’

‘புலி’யுடன் மோதும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’

செய்திகள் 17-Aug-2015 11:43 AM IST VRC கருத்துக்கள்

முதலில் ‘டெய்சி’ என்று தலைப்பிடப்பட்டு பிறகு படத்தின் கதையின் தன்மைக்கு ஏற்றவாறு அஜித் படப் பாடல் வரியான 'உனக்கென்ன வேணும் சொல்லு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. அமானுஷ்ய சக்தியைப் பற்றிய கதையை கொண்ட இப்படத்தில் தீபக் பரமேஷ், ஜாக்லின் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா, அனிதா ரெட்டி, மைம் கோபி முதலானோர் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கியிருக்கும் இப்படத்தை வருகிற விநாயக சதுர்த்தியை முன்னிட்டு அடுத்த மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதே நாளில் தான் விஜய்யின் ‘புலி’ திரைப்படமும் ரிலீசாகிறது. தற்போது ‘புலி’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதோடு, படத்தை பிரம்மாண்ட முறையில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீசாவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;