‘பீகே’ சாதனையை முறியடித்தது பாகுபலி!

‘பீகே’ சாதனையை முறியடித்தது பாகுபலி!

செய்திகள் 17-Aug-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

ராஜமௌலியின் ‘பாகுபலி’ படம் வெளியானதிலிருந்து சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமைய ‘பாகுபலி’ ஏற்கெனவே பெற்றுள்ள நிலையில் இப்போது இந்திய அளவில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் அடைந்திருக்கிறது ‘பாகுபலி’.

இதுவரை இந்திய அளவில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை தக்க வைத்துக்கொண்டிருந்தது ஆமீரகானின் ‘பீகே’ படம் தான்! இப்பொது அந்த சாதனையை ராஜமௌலியின் ‘பாகுபலி’ முறியடித்து, ‘பீகே’யை பின்னுக்கு தள்ளியுள்ளது. பிரபல forbes பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரக்கணக்கில் இதனை தெரிவித்துள்ளது. இந்திய அளவில் ‘பாகுபலி’ இதுவரையில் 500 கோடி ரூயாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். ‘பீகே’யின் இந்திய அளவிலான அதிகபட்ச வசூல் 440 கோடியாம். உலக அளவிலான வசூல் சாதனையில் ‘பீகே’ இன்னமும் (740 கோடி ரூபாய்) முதல் இடத்தில் இருந்து வருகிறது. இரண்டாவது இடத்தில் (594 கோடி) ‘பஜ்ரங்கி பைஜான்’ படமும், மூன்றாவது இடத்தில் (566 கோடி) ‘பாகுபலி’யும் இருந்து வருவதாக அந்த பத்திரிகையின் புள்ளி விவர கணக்குகள் தெரிவிக்கிறது. உலக அளவில அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமை ‘பாகுபலி’க்கு கிடைக்குமா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;