ஸ்ரீகாந்த் பெயரில் ட்விட்டரில் மோசடி!

ஸ்ரீகாந்த் பெயரில் ட்விட்டரில் மோசடி!

செய்திகள் 17-Aug-2015 11:12 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் ஸ்ரீகாந்த், தனது பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக புகார் கூறி உள்ளார். ஸ்ரீகாந்த் பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி கணக்கு மூலம் நடிகர் சிம்புவை தாக்கி ‘ட்வீட்’டும் செய்துள்ளனர். இதையறிந்து அதிர்ச்சியுற்ற ஸ்ரீகாந்த் ஒரு அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு,

‘‘நான் இதுவரை ட்விட்டரில் எந்த கணக்கும் வைத்துக்கொண்டதில்லை. யாரோ சில விஷமிகள் என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. நடிகர் சிம்பு என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நான் அஜித், சிம்புவின் ரசிகர்கள் பற்றி எந்த ஒரு விமர்சனத்தையும் செய்யவில்லை. என் பெயரில் போலியாக இப்படி செயல்பட்டு விஷமத்தனங்கள் செய்து வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஸ்ரீகாந்த் அதில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;