இயக்குனர் ஷங்கருக்கு இன்று விசேஷமான நாள்!

இயக்குனர் ஷங்கருக்கு இன்று விசேஷமான நாள்!

செய்திகள் 17-Aug-2015 10:58 AM IST VRC கருத்துக்கள்

இந்திய சினிமாவை பொறுத்தவரையில் பிரம்மாண்ட இயக்குனர் யார் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருபவர் இயக்குனர் ஷங்கர் தான். 1993- ஆண்டு ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி கடந்த 22 ஆண்டு காலத்தில் இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 13 தான் என்றாலும் அவர் இயக்கியவற்றில் பெரும்பாலான படங்களும் நம் மனதை விட்டு நீங்காதது. தமிழ் சினிமாவை இந்திய அளவில் பேச வைத்த பெருமைக்குரியவர்களில் இயக்குனர் ஷங்கருக்கும் முக்கிய இடம் உண்டு. தற்போது அடுத்து இயக்கவிருக்கும் பிரம்மாண்ட படத்தின் வேலைகளில் படு பிசியாக இயங்கி வரும் ஷங்கருக்கு இன்று விசேஷமான நாள்! அதாவது ஷங்கர் பிறந்த நாள் ஆக்ஸ்ட்-17. திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் நல் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் ஷங்கருக்கு ‘டாப் 10 சினிமா’வும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;