மலையாள ரீமேக்கில் அருள்நிதி!

மலையாள ரீமேக்கில் அருள்நிதி!

செய்திகள் 17-Aug-2015 10:48 AM IST VRC கருத்துக்கள்

‘டிமான்டி காலனி’ ‘ நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ ஆகிய படங்களை தொடர்ந்து அருள்நிதி மலையாள ரீமேக் படம் ஒன்றில் நடிக்கிறார். மலையாள ‘திருசியம்’ மற்றும் அதன் தமிழ் ரீமேக் ஆன ‘பாபநாசம்’ படங்களை இயக்கிய ஜீத்து ஜோசஃப் ‘திருசியம்’ படத்திற்கு முன் மலையாளத்தில் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘மெம்மரீஸ்’. ப்ருத்திவிராஜ் கதாநாயகனாக நடித்த இப்படம் தமிழில் ரீமேக் ஆக, இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்டை அறிவழகன் இயக்குகிறார். வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் செய்த ‘டிமான்டி காலனி’ படத்தை தமிழகம் முழுவதும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ வெளியிட்டிருந்த்து. இந்த படத்தை தொடர்ந்து ‘மெம்மரீஸ்’ ரீமேக்கிலும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் பங்கு வகிக்கிறது. ‘மெம்மரீஸ்’ படத்தில் கொலை வழக்குகளை விசாரிக்கும் மதுவுக்கு அடிமையான ஒரு போலீஸ் அதிகாரியாக ப்ருத்திவிராஜ் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டுக்களை பெற்றதோடு, கமர்ஷியலாகவும் வெற்றிபெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;