மயில்தேவர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ‘மருதாண்டசீமை’

மயில்தேவர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ‘மருதாண்டசீமை’

செய்திகள் 14-Aug-2015 12:55 PM IST VRC கருத்துக்கள்

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். நடிப்பில் ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய நிறுவனம் ‘தேவர் ஃபிலிம்ஸ்’. இந்த நிறுவனத்தின் சார்பில், ‘மயில்தேவர் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் மீண்டும் திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் கே.சி.பிரசாத். இவர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் பல்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் தயாரிக்கும் முதல் படத்திற்கு ‘மருதாண்டசீமை’ என்று பெயர் வைத்திருக்கிறார். இப்படத்தை வெற்றிமகாலிங்கம் இயக்குகிறார்.

அரசு விடுதிகளில் வாழும் மாணவர்களின் வாழ்க்கையை தனது முதல் படமான ‘அரும்பு மீசை குறும்பு பார்வை’ படத்தில் பதிவு செய்த இயக்குனர் வெற்றி மகாலிங்கம் தனது இரண்டாவது படமான ‘வெண்நிலா வீடு’ படத்தில் கிராமத்திலிருந்து நகரத்துக்கு புலம் பெயர்ந்த நடுத்தர குடும்பத்தின் வாழ்வியலை சொன்னார். தற்போது ‘மருதாண்டசீமை’ படத்தில் விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்கள் சந்திக்கும் இடத்தில் வாழும் மக்களின் வாழ்வியலை சொல்ல இருக்கிறார் வெற்றி மகாலிங்கம்.

இப்படத்தில் முன்னனி தொழில்நுட்பக் கலைஞர்களும், பிரபல நடிகர், நடிகைகள் பங்கேற்கிறார்கள். இன்று பாடல் பதிவுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வாலு - தாறுமாறு பாடல் வீடியோ


;