‘சவாலே சமாளி’யில் எஸ்.ஜே.சூர்யாவை கவர்ந்த பாடல்!

‘சவாலே சமாளி’யில் எஸ்.ஜே.சூர்யாவை கவர்ந்த பாடல்!

செய்திகள் 14-Aug-2015 12:55 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் அருண்பாண்டியனின் ‘A & P குரூப்ஸ்’ நிறுவனம் சார்பாக கவிதா பாண்டியன், எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கும் படம் ‘சவாலே சமாளி’. இப்படத்தில் அசோக் செல்வன், பிந்துமாதவி ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெகன், ஊர்வசி, ஐஸ்வர்யா, கருணாஸ், சுவாதி, கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ப்ரீத்தி தாஸ் முதலானோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் சத்யசிவா படம் குறித்து பேசும்போது,

‘‘இது ஒரு பக்கா கமர்ஷியல் படம். இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அந்தந்த பாத்திரங்களாக மாறி நடித்துள்ளனர். இப்படத்திற்காக எஸ்.எஸ்.தமன் இசையில் பதிவு செய்யப்பட பாடலான ‘‘நல்லவனா கெட்டவனா… ஆம்பள தெரியாமதான் தவிக்கிறான்டா….” என்ற பாடலை கேட்ட எஸ்.ஜே.சூர்யா இந்த பாடலின் படப்பிடிப்பு எப்போது எங்கே நடந்தாலும் சொல்லுங்க, நான் வந்து பார்க்கணும் என்றார். அசோக் செல்வன், ஜெகன், ஐஸ்வர்யா ஆகியோர் நடித்த அந்த பாடல் மகாபலிபுரம் அருகே எடுக்கப்பட்டபோது எஸ்.ஜே.சூர்யா வந்திருந்து படப்பிடிப்பை பார்த்து பாடலையும், அதை படமாக்கப்பட்ட விதத்தையும் பாராட்டிச் சென்றார். நடிகை லஷ்மியின் மகள் ஐஸ்வர்யா முதன் முதலாக இப்படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இப்படத்தை அடுத்த மாதம் 4-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;