கார்த்திக்கு கொம்பன், விஷாலுக்கு மருது!

கார்த்திக்கு கொம்பன், விஷாலுக்கு மருது!

செய்திகள் 13-Aug-2015 4:29 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தி நடிப்பில் ‘கொம்பன்’ படத்தை இயக்கிய முத்தையா அடுத்து இயக்கும் படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ சார்பில் அன்புச் செழியன் தயாரிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்திற்கு ‘மருது’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை வேல்ராஜ் ஏற்றிருக்க, டி.இமான் இசை அமைக்கிறார். வீரசமர் கலை பொறுப்பை கவனிக்கிறார். ஹீரோயின் மற்றும் இதர நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. முத்தையா இயக்கிய ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ பட வரிசையில் இப்படமும் கிராமத்து கதையாக உருவாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;