ஸ்ரீதேவி பிறந்த நாளுக்கு ‘புலி’ டீமின் சர்ப்ரைஸ்!

ஸ்ரீதேவி பிறந்த நாளுக்கு ‘புலி’ டீமின் சர்ப்ரைஸ்!

செய்திகள் 13-Aug-2015 3:50 PM IST VRC கருத்துக்கள்

விஜய்யின் ‘புலி’ படத்தின் பாடல்களும், டீஸரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலரை வருகிற 20-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். ‘புலி’ படத்தில் ராணியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவியின் பிறந்த நாள் இன்று! ஸ்ரீதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று, விஜய் அவருக்கு ஃபேஸ்புக் மூலம் வாழ்த்து தெரிவித்திருப்பதுடன் ‘புலி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளார். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் முதலானோர் நடித்துள்ள ‘புலி’ படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அடுத்த மாதம் 17–ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;