முதல்முறையாக இரட்டை வேடத்தில் விக்ரமா?

முதல்முறையாக இரட்டை வேடத்தில் விக்ரமா?

செய்திகள் 13-Aug-2015 12:06 PM IST Chandru கருத்துக்கள்

‘கோலிசோடா’ இயக்குனர் விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘10 எண்றதுக்குள்ள’. சமந்தா ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். நேற்று வெளியிடப்படப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தொடர்ந்து இன்று இப்படத்தின் டீஸர் வெளியாகவிருக்கிறது. சற்று நேரத்திற்கு முன்பு இப்படத்தின் டீஸர் வெளியீட்டுடன் கூடிய பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு சீயான் விக்ரம், ‘மகாராசன்’ கமல் போன்ற மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதனால் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மழுப்பியபடி பதிலளித்திருக்கிறார்கள் இயக்குனர் விஜய் மில்டனும் விக்ரமும். ஆனால், விக்ரம் இப்படத்தில் இரண்டு வேடங்களில்தான் நடித்திருக்கிறார் என்ற பேச்சும் அங்கு அடிபட்டது. ஒருவேளை ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் பட்சத்தில், இரட்டை வேடத்தில் அவர் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரசிவாஜி - டிரைலர்


;